'யசோதா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


யசோதா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

சமந்தா நடிப்பில் வெளியான 'யசோதா' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் உருவான திரைப்படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக வெளியான இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மணிஷர்மா இசையமைத்த 'யசோதா' படத்தை சிவலெங்க கிருஷ்ண பிரசாத் தனது ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'யசோதா' திரைப்படம் வெளியான 10 நாட்களில் ரூ.33 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'யசோதா' திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.



Next Story