'மிஸ் மேகி' படத்தின் படப்பிடிப்பு நிறைவு - லேடி கெட்டப்பில் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு


மிஸ் மேகி படத்தின் படப்பிடிப்பு நிறைவு - லேடி கெட்டப்பில் கேக் வெட்டி கொண்டாடிய யோகிபாபு
x

யோகிபாபு நடிக்கும் 'மிஸ் மேகி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது இயக்குனர் லதா ஆர் மணியரசு இயக்கத்தில் 'மிஸ் மேகி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் இசையமைக்கிறார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்கிறார். ஆங்கிலோ இந்தியன் பாட்டி கெட்டப்பில் வித்தியாசமான லுக்கில் யோகி பாபு இடம் பெற்ற டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் 'மிஸ் மேகி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். யோகிபாபு லேடி கெட்டப்பில் கேக் வெட்டும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story