கதை நாயகனாக யோகிபாபு


கதை நாயகனாக யோகிபாபு
x

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் ‘தூக்குதுரை’ படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கிறார்.

அரவிந்த் வெள்ளைபாண்டியன் மற்றும் அன்புராசு கணேசன் தயாரிக்க, டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு - இனியா நடிக்கும் படம் 'தூக்குதுரை'. யோகிபாபு கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்திலும் கதையின் நாயகனாக வருகிறார். இனியா கதையின் நாயகியாக நடிக்கிறார். அட்வென்ச்சர் திரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இந்தப் படத்தை இயக்குகிறார். `தூக்குதுரை' திரைப்படம் மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடக்கிறது. மொட்ட ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: ரவி வர்மா கே, இசை: கே.எஸ். மனோஜ்.


Next Story