'செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது உங்கள் ஒளிப்பதிவாளர்' - படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ


செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது உங்கள் ஒளிப்பதிவாளர் - படக்குழுவினரை படம் பிடித்த விஜய்.. வைரலாகும் வீடியோ
x

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'தளபதி 67' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி (நடிகராக அறிமுகமாகிறார்), மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கு 'லியோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் 'லியோ' திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு படப்பிடிப்புக்காக தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், காஷ்மீர் படபிடிப்புக்காக தனி விமானத்தில் சென்ற வீடியோவை பகிர்ந்து உறுதிபடுத்தியுள்ளனர். அப்போது விமானத்தில் இருந்த அனைவரையும் விஜய் சந்தித்து கையசைத்து வரவேற்றார். மேலும் படக்குழுவினரை வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story