கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள்..!


கிறிஸ்துமஸ்  நட்சத்திரங்கள்..!
x
தினத்தந்தி 24 Dec 2016 9:44 AM GMT (Updated: 24 Dec 2016 9:44 AM GMT)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பாலிவுட் நடிகர்–நடிகைகள் வட்டாரத்திலும் களை கட்டிவிட்டது. சாண்டா கிளாஸ் உடைகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் விருந்து என பாலிவுட் நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களாக மாறி... ஜொலிக்கிறார்கள். அதில் சில ருசிகர தகவல்கள்...

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... பாலிவுட் நடிகர்–நடிகைகள் வட்டாரத்திலும் களை கட்டிவிட்டது. சாண்டா கிளாஸ் உடைகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் விருந்து என பாலிவுட் நட்சத்திரங்கள் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களாக மாறி... ஜொலிக்கிறார்கள். அதில் சில ருசிகர தகவல்கள்...

சன்னி லியோன்

இவருக்கு கிறிஸ்துமஸ் பொழுது, வெளிநாடுகளில் தான் பிறக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்தில் குறைந்தது 7 புதிய உடைகளாவது அணிந்து கொண்டாடுவது சன்னி லியோனின் பழக்கவழக்கமாம்.

சோனம் கபூர்

ஆர்ப்பாட்டமில்லாத சோனம் கபூர், கிறிஸ்துமஸை கிறிஸ்துமஸ் மரங்களோடு கொண்டாடுகிறார். மற்றபடி புதிய ஆடைகள், நகைகள் எல்லாம் சோனத்திற்கு பிடிக்காதாம். அதனால் வீடு, படப்பிடிப்பு தளம், தோழிகளின் வீடு... என தன்னை சுற்றி கிறிஸ்துமஸ் மரங்களை நட்டுவைத்து அழகுபார்க்கிறார்.

கங்கனா ரனாவத்

சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் விதவிதமான உடைகள் தான் கங்கனாவின் கிறிஸ்துமஸ் உடைகளாம். கடந்த ஆண்டு பிளேசர் வடிவில் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடைகளை அலங்கரித்தவர், இம்முறை நீளமான கோட்வடிவில் தயாரித்திருக்கிறாராம். புதுப்புது உடைகள் என்றாலும் வீட்டிற்குள் மட்டுமே அணிந்து மகிழும் பழக்கமும் கங்கனாவிடம் உள்ளது.



பிரீத்தி ஜிந்தா

டிசம்பர் மாதம் முழுவதுமே பிரீத்தி ஜிந்தாவிற்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தான். ஏனெனில் சாண்டா கிளாஸ் உடையை அணிந்துக்கொண்டு சொந்தபந்தங்களின் வீட்டுக்குள் நுழைந்து ஆடிப்பாடி கொண்டாடுகிறார். மேலும் தன்னுடன் சண்டையிட்டு பிரிந்து சென்ற தோழிகளை டிசம்பர் மாதத்தில் தேடி சென்று சந்தோஷப்படுத்துகிறார்.

ஷாருக் கான்

தன்னுடைய கடைக்குட்டி மகன் ஆப்ராமிற்கு கிறிஸ்துமஸ் உடைகளை அணிவித்து அழகுபடுத்தவே ஷாருக்கிற்கு கிறிஸ்துமஸ் பொழுது சரியாக இருக்கிறது. காலையில் சாண்டா கிளாஸ் உடை, மாலையில் குட்டி கோட்–சூட் என ஆப்ராமை கிறிஸ்துமஸ் உடைகளை கொண்டு அட்டகாசப்படுத்தி விடுகிறார்.

Next Story