விக்ரமுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார், தமன்னா!


விக்ரமுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார், தமன்னா!
x
தினத்தந்தி 13 Feb 2017 9:04 AM GMT (Updated: 13 Feb 2017 9:04 AM GMT)

‘இரு முகன்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் இப்போது கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில், ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார்.

இதில் விக்ரம் ஜோடியாக சாய் பல்லவி நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது அவருக்கு பதில் தமன்னா நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக் கிறது. விக்ரமுடன் தமன்னா ஜோடி சேரும் முதல் படம், இது!

Next Story