ஜோதிகா போய் நித்யா மேனன் வந்தார்!


ஜோதிகா போய் நித்யா மேனன் வந்தார்!
x
தினத்தந்தி 27 Feb 2017 9:59 AM GMT (Updated: 27 Feb 2017 9:59 AM GMT)

விஜய் நடித்து வரும் அவருடைய 61-வது படத்தில் அவருடன் ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிப்பதாக இருந்தார்கள்.

இதற்கான புகைப்பட காட்சிகளும் எடுக்கப்பட்டன. அதில் ஜோதிகா கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் திடீரென்று இந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். அவருடைய விலகலுக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

ஜோதிகாவுக்குப் பதில் நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடை பெறுகிறது. விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தாவுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், சத்யன், கோவை சரளா ஆகியோரும் நடிக் கிறார்கள்!

Next Story