மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்


மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் மீண்டும் அருண் விஜய்
x
தினத்தந்தி 15 April 2017 7:41 AM (Updated: 15 April 2017 7:40 AM)
t-max-icont-min-icon

அறிவழகன் டைரக்‌ஷனில் அருண் விஜய் நடித்த ‘குற்றம் 23’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து,

அந்த படத்தை தயாரித்த இந்தர்குமார் அடுத்து ஒரு படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்த படத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘முன்தினம் பார்த்தேனே,’ ‘தடையறத்தாக்க,’ ‘மீகாமன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். மகிழ் திருமேனி டைரக்‌ஷனில் அருண் விஜய் நடித்த ‘தடையறத்தாக்க’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இருவரும் மீண்டும் இணையும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. கதாநாயகி மற்றும் நடிகர்-நடிகைகளும் முடிவாகவில்லை.
1 More update

Next Story