16 வருடங்களுக்குப்பின் சத்யராஜ்-கவுசல்யா இணைந்து நடிக்கிறார்கள்


16 வருடங்களுக்குப்பின் சத்யராஜ்-கவுசல்யா இணைந்து நடிக்கிறார்கள்
x
தினத்தந்தி 9 May 2017 8:08 AM GMT (Updated: 9 May 2017 8:07 AM GMT)

சத்யராஜும், கவுசல்யாவும் 2001-ம் வருடம் திரைக்கு வந்த ‘குங்கும பொட்டு கவுண்டர்’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள்.

16 வருடங்களுக்குப்பின், ‘எச்சரிக்கை’ என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

இதில், வரலட்சுமி சரத்குமார் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்ஜுன் கே.எம். டைரக்டு செய்கிறார். சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். வினாடிக்கு வினாடி திடீர் திருப்பங்களை கொண்ட திகில் படம், இது.

Next Story