ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது


ஒன்றைவிட இரண்டு குழந்தைகளே சிறந்தது
x
தினத்தந்தி 24 Jun 2017 9:30 AM GMT (Updated: 24 Jun 2017 9:30 AM GMT)

நடிகை ட்ரூ பேரிமோர் இப்போது இரு பெண் குழந்தைகளுக்கு தாய். எல்லா அம்மாக்களையும் போலவே தனது தாய்மை குறித்த பூரிப்பிலிருந்து அவர் இன்னும் விலகவில்லை.

டிகை ட்ரூ பேரிமோர் இப்போது இரு பெண் குழந்தைகளுக்கு தாய். எல்லா அம்மாக்களையும் போலவே தனது தாய்மை குறித்த பூரிப்பிலிருந்து அவர் இன்னும் விலகவில்லை. அதுபற்றி கூறுகிறார்.... “என்னுடைய இப்போதைய கவனம் எல்லாம் என் இரு பெண் குழந்தைகளை பாதுகாப்புடன் பராமரித்து வளர்ப்பதுதான். என்னைப் பொறுத்தவரை ஒரு குழந்தையைவிட இரண்டு குழந்தைகள் சிறப்பானது என்பேன். அப்படி ஒரு வாழ்க்கையை வார்த்தைகளால் விவரிப்பதை விட, வாழ்ந்து பார்ப்பதே சிறந்தது. நான் நடித்த ‘பிளான்டட்’ திரைப்படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பேன். இரு பெண் குழந்தைகளை வளர்ப்பது சந்தோஷமாக இருந்தாலும், சவால்கள் நிறைந்ததே. எந்த நேரத்திலும் பிரச்சினை வெடிக்கலாம்” என்கிறார். 

Next Story