இளம் வயது ரஜினியாக தனுஷ்?


இளம் வயது ரஜினியாக தனுஷ்?
x
தினத்தந்தி 17 July 2017 9:23 AM GMT (Updated: 17 July 2017 9:22 AM GMT)

ரஜினிகாந்த் நடிக்க, பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் தனுஷ் தயாரித்து வரும் ‘காலா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், ‘காலா’ படத்தில் சின்ன வயது ரஜினிகாந்தாக தனுஷ் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் பரவியது. இதுபற்றி தனுசிடம் கேட்டபோது-
“காலா படத்தில் இளம் வயது ரஜினிகாந்த் என்று ஒரு கதாபாத்திரம் இருக்கிறதா? என்பதே எனக்கு தெரியாது. அப்படி ஒரு கதாபாத்திரம் அந்த படத்தில் இருந்து அதில் எனக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சிதான்” என்று பதில் அளித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “பவர் பாண்டி படத்தின் இரண்டாம் பாகம் என் மனதில் இருக்கிறது. அந்த படம் என் டைரக்‌ஷனில் தயாராகுமா என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை!” என்றார்.

Next Story