அம்ரேஷ் இசையில் பிரபுதேவா எழுதிய பாடல்!


அம்ரேஷ் இசையில் பிரபுதேவா எழுதிய பாடல்!
x
தினத்தந்தி 31 July 2017 9:30 AM GMT (Updated: 31 July 2017 7:37 AM GMT)

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு இசையமைத்தபின், இசையமைப்பாளர் அம்ரேஷ் (நடிகை ஜெயசித்ராவின் மகன்)க்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

அவற்றில் 9 படங்களுக்கு மட்டும் இசையமைக்க சம்மதித்து இருக்கிறார், அம்ரேஷ். இப்போது அவர், வாசன் விசுவல் வென்சர்ஸ் தயாரிக்க, பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கும் ‘யங் மங் சங்’ படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இதுவரை, டான்ஸ் மாஸ்டர், நடிகர், டைரக்டராக இருந்து வந்த பிரபுதேவா, இந்த படத்தின் மூலம் பாடல் ஆசிரியராகவும் மாறியிருக்கிறார். அவர் எழுதிய “அய்யானாரா வந்துட்டாக இங்க பாரு...” என்ற பாடலை சங்கர் மகாதேவன் பாட- அம்ரேஷ் இசையில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. பிரபுதேவாவும், லட்சுமி மேனனும் நடித்த அந்த பாடல் காட்சி, ஒரே நாளில் படமாக்கி முடிக்கப்பட்டது.

1980-ல் நடப்பது போன்ற கதையம்சம் கொண்ட இந்த படத்தை அர்ஜுன் டைரக்டு செய் கிறார்.

Next Story