கணவர்-மனைவி உறவுக்கு எடுத்துக்காட்டாக...!


கணவர்-மனைவி உறவுக்கு எடுத்துக்காட்டாக...!
x
தினத்தந்தி 31 July 2017 10:00 AM GMT (Updated: 2017-07-31T13:29:10+05:30)

அஜித்-காஜல் அகர்வால் நடித்து, சிவா டைரக்டு செய்துள்ள ‘விவேகம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்த படத்தை பற்றிய கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது.

 படத்தில், அஜித் சர்வதேச போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது தெரிந்த தகவல். அஜித்தும், காஜல் அகர்வாலும் கணவர்-மனைவியாக நடித்திருப்பது, புதிய தகவல்.

கணவர் என்றால் இப்படியிருக்க வேண்டும்...மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும்...என்று உதாரணம் காட்டுகிற அளவுக்கு, அஜித்தும், காஜல் அகர்வாலும் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு அதிரடியான திரைப்படத்தில், கணவர்-மனைவி உறவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது, ‘விவேகம்’ படத்தில் புதுசாக இருக்கும் என் கிறார்கள், படக்குழுவினர்.

Next Story