மொட்டை ராஜேந்திரனுக்கு தினமும் ரூ.3 லட்சம்!


மொட்டை ராஜேந்திரனுக்கு தினமும் ரூ.3 லட்சம்!
x
தினத்தந்தி 31 Aug 2017 10:30 PM GMT (Updated: 31 Aug 2017 12:13 PM GMT)

‘நான் கடவுள்’ படத்தில் பாலா அறிமுகம் செய்த வில்லன் நடிகர், மொட்டை ராஜேந்திரன். கொடூரமான வில்லனாக நடித்து வந்த இவர், இப்போது நகைச் சுவைக்கு மாறி விட்டார்.

‘நான் கடவுள்’ படத்தில் பாலா அறிமுகம் செய்த வில்லன் நடிகர், மொட்டை ராஜேந்திரன். கொடூரமான வில்லனாக நடித்து வந்த இவர், இப்போது நகைச் சுவைக்கு மாறி விட்டார். காமெடி வில்லனாக நடித்து வரும் அவருக்கு கை நிறைய பட வாய்ப்புகள். நடித்துக் கொடுக்க முடியாத அளவுக்கு பட வாய்ப்புகள் வருவதால், இவர் தனது சம்பளத்தை உயர்த்தினார்.

ஒருநாளைக்கு ஒரு லட்சம் வாங்கி வந்த அவர் தற்போது, ரூ.3 லட்சமாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். ‘‘மூணு லட்சம் இருந்தால் பேசுங்கள். இல்லையென்றால் இடத்தை காலி செய்யுங்கள்’’ என்று சொல்கிற அளவுக்கு ‘பிஸி’யாகிவிட்டார், மொட்டை ராஜேந்திரன்!

Next Story