சல்மானின் கோபம்


சல்மானின் கோபம்
x
தினத்தந்தி 23 Sep 2017 8:07 AM GMT (Updated: 23 Sep 2017 8:06 AM GMT)

ரசிகர் ஒருவர், சல்மான் கானை நெருங்கியதோடு, தான் புதிதாக வாங்கியிருக்கும் செல்போன் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

ண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார். அப்போது அவரது ரசிகர் ஒருவர், சல்மான் கானை நெருங்கியதோடு, தான் புதிதாக வாங்கியிருக்கும் செல்போன் பற்றி பெருமையாக பேசியுள்ளார். அதை கேட்டு சல்மான் கான் புன்னகைத்ததும், அந்த ரசிகர் ‘‘இது உடையாத செல்போன்’’ என்று பெருமையாக கூறியிருக்கிறார். இதில் ஆத்திரமடைந்த சல்மான் கான் அந்த ரசிகர் கையில் இருந்த செல்போனை வாங்கி தூக்கிப் போட்டுள்ளார். ரசிகர் கூறியிருந்தப் படியே செல்போன் உடையாமல் கீழே விழுந்துள்ளது. உடனே சல்மான் கான் மீண்டும் செல்போனை தூக்கிப் போட்டாராம். அப்போதும் உடையாமல் இருந்ததால், மூன்றாவது முறையாக தூக்கிப் போட்டிருக்கிறார். அவர் தூக்கி போட்ட வேகத்தில் செல்போன் நொறுங்கி விட்டது. ‘சல்மான் கானுக்கு தற்போதுதான் கோபம் குறைந்துள்ளது’ என பாலிவுட் நண்பர்கள் கூறிவரும் நிலையில், அவரது ரசிகரே அவரை கோபப்படுத்தி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story