நிறம் மாறினார், களஞ்சியம்!


நிறம் மாறினார், களஞ்சியம்!
x
தினத்தந்தி 5 Oct 2017 10:30 PM GMT (Updated: 4 Oct 2017 10:02 AM GMT)

5 படங்களை டைரக்டு செய்துள்ள களஞ்சியம், இப்போது நடிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு, முந்திரிக்காடு ஆகிய 5 படங்களை டைரக்டு செய்துள்ள களஞ்சியம், இப்போது நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம், ‘களவு தொழிற்சாலை.’ அந்த படத்தில், அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் இஸ்லாமிய அதிகாரியாக நடித்து இருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, களஞ்சியம் 3 மாதங்கள் போராடி தனது நிறத்தை மாற்றியிருக்கிறார். படத்தை பார்த்தவர்கள், ‘‘நீங்களா அது, நம்பமுடியவில்லை’’ என்கிறார்களாம்!

Next Story