அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா


அதிகம் சம்பாதிக்கும் பிரியங்கா சோப்ரா
x
தினத்தந்தி 9 Oct 2017 9:41 AM GMT (Updated: 2017-10-09T15:11:13+05:30)

இந்தி நடிகைகளில் அதிகம் சம்பாதிப்பவராக இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி முதல் இடத்தில் இருக்கும் கங்கனா ரணாவத்தை மொத்த வருமானத்தில் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். பிரியங்கா சோப்ரா ஒரு படத்துக்கு ரூ.7 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். விளம்பர படங் களில் நடிக்கவும் கோடி கோடியாய் வாங்குகிறார்.

பே வாட்ச் ஆங்கில படத்தில் நடித்து ஹாலிவுட்டுக்கும் போய் இருக்கிறார். அதோடு குவாண்டிகோ என்ற ஆங்கில டெலிவிஷன் தொடரில் நடித்து சர்வதேச அளவிலும் ரசிகர்களை சம்பாதித்து இருக்கிறார். டெலிவிஷன் தொடரில் நடித்ததற்காக ஒரு வருடத்தில் அவருக்கு ரூ.65 கோடி கிடைத்துள்ளதாம். உலக அளவில் டெலிவிஷனில் நடித்து அதிகம் சம்பாதித்த நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா 8-வது இடத்தில் இருக்கிறார். இவர் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story