அனுஷ்காவை கவர்ந்தவர்கள்!


அனுஷ்காவை கவர்ந்தவர்கள்!
x
தினத்தந்தி 18 Jan 2018 11:00 PM GMT (Updated: 18 Jan 2018 10:49 AM GMT)

அனுஷ்கா, கதாநாயகர்களுக்கு இணையாக உடம்பை கூட்டியும், குறைத்தும், வாள் சண்டை–குதிரையேற்ற பயிற்சிகள் எடுத்தும், படங்களில் நடித்து, சக நடிகைகளை ஆச்சரியப்படுத்துகிறார்.

அனுஷ்கா, கதாநாயகர்களுக்கு இணையாக உடம்பை கூட்டியும், குறைத்தும், வாள் சண்டை–குதிரையேற்ற பயிற்சிகள் எடுத்தும், படங்களில் நடித்து, சக நடிகைகளை ஆச்சரியப்படுத்துகிறார். ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில், அவர் குண்டு பெண்ணாக நடித்ததற்கு பாராட்டுகள் குவிந்தன. அடுத்து ‘பாக்மதி’ சரித்திர படத்திலும் அவர் வித்தியாசமான வேடம் ஏற்றுள்ளார்.

‘‘இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது?’’ என்று அனுஷ்காவிடம் கேட்டபோது, தமிழில் விக்ரம், மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் அமீர்கான், தெலுங்கில் பிரபாஸ் ஆகியோரை முன் உதாரணமாக எடுத்தே இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன்’’ என்றார்.

 ‘‘56 வயதாகும் மோகன்லால் இப்போதையை இளம் கதாநாயகர்களுக்கு இணையாக கஷ்டப்பட்டு புது முயற்சிகளில் இறங்கி நடிப்பது என்னை மிகவும் கவர்ந்துள்ளது’’ என்றும் அனுஷ்கா தெரிவித்தார்!

Next Story