சினிமா துளிகள்

தடை + "||" + Ban

தடை

தடை
நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘மணிகர்னிகா’ திரைப்படத்தால் தற்போது சர்ச்சை வெடித்திருக்கிறது.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ‘மணிகர்னிகா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ‘பத்மாவத்’ திரைப்படத்தை போன்றே வரலாற்று சிறப்புவாய்ந்த திரைப்படம். அதனால்தான் தற்போது சர்ச்சை வெடித்திருக்கிறது.

பத்மாவத் திரைப்படத்தில் வரலாற்றை சிதைக்கும் காட்சிகள் இடம்பிடித்திருப்பதாக போராட்டம் நடத்தியவர்கள், தற்போது ‘மணிகர்னிகா’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிலர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அடிதடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால் படப்பிடிப்பு குழுவினர் போலீஸ் துணையுடன் படப்பிடிப்பை தொடங்கிஇருக்கிறார்கள்.