ஆபாசமான வரிகளும் ‘அதிர்ச்சி அடைந்த நடிகையும்...


ஆபாசமான வரிகளும் ‘அதிர்ச்சி அடைந்த நடிகையும்...
x
தினத்தந்தி 28 Feb 2018 5:20 AM GMT (Updated: 28 Feb 2018 5:20 AM GMT)

தற்போது தயாராகி வரும் ஒரு தெலுங்கு படத்தில், ‘அகர்வால்’ நடிகையை ஒரே ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆட அழைத்தார்கள்.

ற்போது தயாராகி வரும் ஒரு தெலுங்கு படத்தில், ‘அகர்வால்’ நடிகையை ஒரே ஒரு கவர்ச்சி பாடலுக்கு ஆட அழைத்தார்கள். அதற்கு அந்த நடிகையும் சம்மதித்தார். முதல் நாள் படப்பிடிப்பில், அவர் சந்தோஷமாக கலந்து கொண்டார்.

அவர் ஆடுவதற்கு தயாரான நிலையில், பாடல் வரிகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பாடல் வரிகள் அனைத்திலும் ஆபாசமான இரட்டை அர்த்தங்கள் நிறைந்து இருந்ததாம். அந்த வரிகளுக்கு ஆட மறுத்த ‘அகர்வால்’ நடிகை, உடனே அங்கிருந்து வெளிநடப்பு செய்து விட்டாராம்!

Next Story