‘டப்பிங்’ பேச நிபந்தனை விதித்த நடிகர்!


‘டப்பிங்’ பேச நிபந்தனை விதித்த நடிகர்!
x
தினத்தந்தி 3 April 2018 9:57 AM GMT (Updated: 3 April 2018 9:57 AM GMT)

‘சாமி’ நடிகர் முதல் ரவுண்டில் வாங்காத சம்பளத்தை இரண்டாவது ரவுண்டில் வாங்கி வருகிறார்.

‘சாமி’ நடிகரின் தற்போதைய சம்பளம், ரூ.3 கோடி! கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நட்பின் அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். தயாரிப்பாளர் ரூ.75 லட்சம் முன்பணமாக நடிகரிடம் கொடுத்தார். மீதி பணத்தை ‘டப்பிங்’ பேசுவதற்கு முன்பு கொடுத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

அவர் சொன்னபடி, மீதி பணத்தை கொடுக்கவில்லையாம். “இதோ கொடுக்கிறேன்...அதோ கொடுக்கிறேன்” என்று இழுத்தடித்ததால் படத்துக்கு, ‘டப்பிங்’ பேச மறுத்து விட்டார், ‘சாமி’ நடிகர். “இரண்டே கால் கோடியை கொடுங்கள். உடனே ‘டப்பிங்’ பேச வருகிறேன்” என்று அவர் நிபந்தனை விதித்து இருக்கிறாராம்! 

Next Story