விலை மாதுவாக அந்த நடிகை!


விலை மாதுவாக அந்த நடிகை!
x
தினத்தந்தி 3 April 2018 11:00 AM GMT (Updated: 3 April 2018 11:00 AM GMT)

அந்த நடிகை உயர் அதிகாரியாக நடித்த மூன்றெழுத்து படம் வெற்றிகரமாக ஓடியதை தொடர்ந்து அதே போன்ற கதைகளும், வேடங்களும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம். ஒரே மாதிரியாக நடிப்பதை தவிர்க்க, அந்த பட வாய்ப்புகளை அவர் ஏற்கவில்லை.

அந்த நடிகையிடம் ஒரு டைரக்டர் கதை சொல்லியிருக்கிறார். நடிகைக்கு கதை ரொம்ப பிடித்து விட்டதாம். “கால்ஷீட் தருகிறேன்” என்று நடிகை வாக்குறுதி கொடுக்க-அடுத்த கட்ட வேலைக்கு டைரக்டர் தயாராகி விட்டார். அவர் சொன்ன கதையில், நாயகி ஒரு விலை மாதுவாம்! சர்ச்சைக்குரிய அந்த வேடத்தில் நடிக்க சம்மதித்த நடிகையை புகழ்ந்து தள்ளுகிறார், டைரக்டர்! (சம்பளம் எத்தனை கோடியோ?) 

Next Story