சினிமா துளிகள்

டைரக்டர் பாலாவும் ‘பாசக்கார' மருமகனும்..! + "||" + Director Bala and affection son in law

டைரக்டர் பாலாவும் ‘பாசக்கார' மருமகனும்..!

டைரக்டர் பாலாவும் ‘பாசக்கார' மருமகனும்..!
ஆந்திராவில் வெற்றி பெற்ற `அர்ஜுன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தை தமிழில் `வர்மா' என்ற பெயரில், `ரீமேக்' செய்து வருகிறார், டைரக்டர் பாலா.
விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இதில் நடித்து வருகிறார். `அர்ஜுன் ரெட்டி'யில் நடித்த ஷாலினி பாண்டேயை `வர்மா' படத்திலும் நடிக்க வைப்பது என்று முதலில் முடிவு செய்திருந்தார்கள்.

இப்போது அவருக்கு பதில், ஒரு மும்பை அழகியை ஜோடி சேர்த்து இருக்கிறார்கள்.


பொதுவாக படப்பிடிப்பு நடக்கும்போது பாலா இறுக்கமாக இருப்பார்...நடிகர்-நடிகைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்வார் என்று சொல்வார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பில், அவர் சிரித்த முகத்துடன் மென்மையாக நடந்து கொள்கிறாராம்.

அவரை கதாநாயகன் துருவ், ``பாலா மாமா... பாலா மாமா...'' என்று பாசமாக அழைக்கிறாராம். துருவின் பாச மழையில், பாலா நெகிழ்ந்து போகிறாராம்!