சினிமா துளிகள்

சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு + "||" + Chennai beach Huge stadium

சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு

சென்னை கடற்கரையில் பிரமாண்டமான அரங்கு
பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக, சென்னை கடற்கரையில் பிரமாண்டமான ஒரு ஓட்டல் அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில், இசக்கி பரத் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், ‘கோலி சோடா-2’ படத்திலும், ‘நாடோடிகள்-2’ படத்திலும் நடித்தவர். இவர்களுடன் சித்ரா லட்சுமணன், யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ராமகிருஷ்ணன். கே.கார்த்திகேயன் தயாரிக்கிறார்.