‘சின்னத்திரை’யில், ஹுமா குரேஷி!


‘சின்னத்திரை’யில், ஹுமா குரேஷி!
x
தினத்தந்தி 29 July 2018 12:38 AM GMT (Updated: 29 July 2018 12:38 AM GMT)

ரஜினிகாந்த் ஜோடியாக, ‘காலா’ படத்தில் நடித்தவர், ஹுமா குரேஷி.

‘காலா’  படத்தில், ரஜினிகாந்தின் இளமைப்பருவ காதலியாக வந்தார். முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்குப்பின் இரு வரும் சந்தித்துக் கொள்வது போல் படத்தில் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. ஹுமா குரேஷி தனது நடிப்பால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்தி பட உலகில் இவருக்கு என்று ரசிகர் படை இருக்கிறது. ‘காலா’வுக்குப்பின், ரசிகர் கூட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில், இவருக்கு ‘சின்னத்திரை’ தொடர் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

“சின்னத்திரையில் நடித்தால், பெரிய திரையில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடும்” என்று ஹுமா குரேஷியிடம், சிலர் பயமுறுத்தினார்கள். “இதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்” என்று ஹுமா குரேஷி, சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்! 

Next Story