கூட்டத்தில் ஒருவராக...!


கூட்டத்தில் ஒருவராக...!
x
தினத்தந்தி 8 Sep 2018 10:30 PM GMT (Updated: 8 Sep 2018 8:29 PM GMT)

கூட்டத்தில் ஒருவராக இருந்து குறிப்பிட்டு சொல்லும்படியான வில்லனாக உயர்ந்திருப்பவர், அருள். இந்த உயரத்தை அடைந்தது எப்படி? என்பது பற்றி அருள் கூறுகிறார்:-

“எனக்கு சினிமா மீது அப்படி ஒரு ஈர்ப்பு. நான், `எம்.பி.ஏ.' படித்து முடித்ததும் ஒரு கார்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கினேன். சினிமா வாய்ப்புக்காக வேலையை விட்டு விட்டேன். முதலில் கூட்டத்தில் ஒருவராக நடந்து போகும் வாய்ப்பு வந்தது. பிறகு முகம் தெரியும்படி வந்த முதல் படம், `முரண்.' தொடர்ந்து, `எங்கேயும் எப்போதும்,' `எதிர்நீச்சல்,' `மாற்றான்' ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் அடையாளம் தெரிகிற அளவுக்கு வந்தேன்.

`எமன்' படத்தில் வயதான வில்லனாக நடித்தேன். என் நடிப்பை பலரும் பாராட்டினார்கள். `துருவங்கள் 16' படத்தில், நல்ல நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இப்போது, `60 வயது மாநிறம்' படத்தின் மூலம் ``அருள் என்று ஒரு வில்லன் இருக்கிறான் என்ற அடையாளம் கிடைத்து இருக்கிறது. நான் என்றுமே டைரக்டரின் நடிகராக இருக்க விரும்புகிறேன்.''


Next Story