``சிவகார்த்திகேயனை மறக்க மாட்டேன்!''


``சிவகார்த்திகேயனை மறக்க மாட்டேன்!
x
தினத்தந்தி 8 Sep 2018 11:00 PM GMT (Updated: 8 Sep 2018 8:37 PM GMT)

தமிழ் பட உலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர், டி.இமான்.

`மைனா' படத்தின் பாடல்கள் இவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. இப்போது, அஜித்குமாரின் `விஸ்வாசம்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

டி.இமானுக்கு புஷ்டியான உடல்வாகு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமானபோதே குண்டாகத்தான் இருந்தார். இந்த நிலையில், அவர் உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டார். இதற்காக அவருக்கு உதவியவர், சிவகார்த்திகேயன். ``அவர் கொடுத்த அறிவுரைதான் உடல் எடையை குறைக்க உதவியது. அவருக்கு என்றுமே நான் கடமைப்பட்டு இருக்கிறேன்'' என்கிறார், டி.இமான்! 

Next Story