பிரபல கதாநாயகிகள் ரகசிய ஆலோசனை!


பிரபல கதாநாயகிகள் ரகசிய ஆலோசனை!
x
தினத்தந்தி 23 Sep 2018 12:49 AM GMT (Updated: 23 Sep 2018 12:49 AM GMT)

மாயா, நானும் ரவுடிதான், அறம், கோல மாவு கோகிலா, இமைக்கா நொடிகள்... என நயன்தாரா நடித்த படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்கள் இவை அனைத்தும் . இதுபோன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடிப்பதில், நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார்.

இவரை பின்பற்றி அனுஷ்கா, திரிஷா ஆகிய இருவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த படங்களும் வெற்றி பெற்றுள்ளன. சமீபத்தில் திரைக்கு வந்த ‘யு டர்ன்’ படமும் வெற்றி பட வரிசையில் சேர்ந்திருக்கிறது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ஒரே வாரத்தில், ரூ.3.7 கோடி வசூல் செய்து இருக்கிறது.

இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம்தான். இந்த படம், தமிழ்நாட்டில் திரைக்கு வந்த அதே தேதியில், ஆந்திராவிலும் திரையிடப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 2 மாநிலங்களிலும் இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. அமெரிக்காவில் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளது.

இந்த வெற்றியும், வசூல் சாதனையும் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பது பற்றி சமந்தாவை யோசிக்க வைத்து இருக்கிறது. இதுபற்றி முன்னணி கதாநாயகிகள் சிலர் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறார்கள்!

Next Story