ஒரு காதல் ஜோடியின் ஊடலும், கூடலும்...!


ஒரு காதல் ஜோடியின் ஊடலும், கூடலும்...!
x
தினத்தந்தி 25 Sep 2018 10:17 AM GMT (Updated: 25 Sep 2018 10:17 AM GMT)

‘நயமான’ நடிகை வருடத்துக்கு ஒருமுறை, வட மாநிலத்தில் உள்ள தங்க கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

இந்த முறை அவர் தனது காதலருடன் அந்த கோவிலுக்கு சென்றார். அங்கு நடந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.

தங்க கோவிலில் இருந்து வெளியே வந்த அவர், பக்கத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலுக்கு போக வேண்டும் என்றாராம். “சர்ச்சுக்கு எல்லாம் போக வேண்டாம். ஒரு இந்து கோவிலுக்கு போகலாம்” என்றாராம், காதலர்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியதாம். வழக்கம் போல் ஓட்டலுக்கு போனபின், இரண்டு பேரும் சமாதானமாகி விட்டார்களாம். ஊடலும், கூடலும் காதலில் சகஜம்தானே...! 

Next Story