சினிமா துளிகள்

உதயநிதியுடன் சீனுராமசாமி! + "||" + Seenu Ramasamy with Udhayanidhi!

உதயநிதியுடன் சீனுராமசாமி!

உதயநிதியுடன் சீனுராமசாமி!
“குறிப்பிட்ட சில படங்களில் வேலை செய்யும்போது, தணிக்கை சான்றிதழ் பற்றி சந்தேகங்கள் எழும்.
சீனுராமசாமியுடன் பணிபுரியும்போது, அதைப்பற்றிய சந்தேகமே எழுவது இல்லை. அப்படிப்பட்ட ஒரு அழகான படத்தின் ஒரு பகுதியாக இருப்பது, எனக்கு கிடைத்த பரிசு. அவருடைய படங்கள் எப்போதும் உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் கற்று தரும். அவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்” என்கிறார், உதயநிதி ஸ்டாலின்.


இவர், சீனுராமசாமியுடன் இணைந்துள்ள ‘கண்ணே கலைமானே’ படத்தில், கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். படத்தில், இன்னொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர், வசுந்தரா காஷ்யப். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சீனுராமசாமி-யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் பாடல்கள் வரவேற்பை பெற்றிருப்பதால், ‘கண்ணே கலைமானே’ படத்தின் பாடல்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது!