ஆண்ட்ரியா எழுதி பாடிய பாடல்!


ஆண்ட்ரியா எழுதி பாடிய பாடல்!
x
தினத்தந்தி 5 Oct 2018 9:40 AM GMT (Updated: 5 Oct 2018 9:40 AM GMT)

நடிகை ஆண்ட்ரியா, அவரே எழுதி பாடிய ஒரு `ஆல்பத்தை' வெளியிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியான ஆண்ட்ரியா, `பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் சரத்குமார் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, பஹத் பாசில் உள்பட பல கதாநாயகர்களின் ஜோடியாக நடித்தார். கதாநாயகி, வில்லி என எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதில் பிரகாசிக்கிற ஆண்ட்ரியா, பல படங்களில் பாடியும் இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய ஆண்ட்ரியா, அவரே எழுதி பாடிய ஒரு `ஆல்பத்தை' வெளியிட்டு இருக்கிறார். ஆல்பத்தின் பெயர், `ஹானஸ்ட்லி.' இந்த ஆல்பத்துக்கு அவரே பாடல் வரிகளை எழுதி, பாடியும் நடித்தும் இருக்கிறார். லியான் ஜேம்ஸ் மற்றும் கெபா ஜெரிமியா ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.

இந்த பாடல் வீடியோ காட்சி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story