ஆரி, ஆதரவு திரட்டுகிறார்!


ஆரி, ஆதரவு திரட்டுகிறார்!
x
தினத்தந்தி 7 Oct 2018 12:25 AM GMT (Updated: 7 Oct 2018 12:25 AM GMT)

வளர்ந்து வரும் கதாநாயகன் ஆரி, `மாறுவோம் மாற்றுவோம்' என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறார்.

அறக்கட்டளை சார்பில் அவர், தாய்மொழியில் கையெழுத்திடும் இயக்கத்தை தொடங்கி, அதற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ``தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல, அடையாளம். இதை வலியுறுத்தி, விழிப்புணர்வு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

அலுவல் சார்ந்த கையொப்பத்தை தாய்மொழியில் மாற்றுவது பற்றிய விழிப்புணர்வு தமிழ்நாடு முழுவதும் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் வாழ்கிற தமிழர்கள், தமிழ் சங்கங்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது'' என்கிறார், ஆரி!

Next Story