நேரம் தவறாத நயன்தாரா!


நேரம் தவறாத நயன்தாரா!
x
தினத்தந்தி 23 Dec 2018 10:05 AM GMT (Updated: 23 Dec 2018 10:05 AM GMT)

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கி முன்னணியில் இருக்கும் கதாநாயகி, நயன்தாரா. தனது படங்கள் வரிசையாக வெற்றி பெறுவதால், புதிய படங்களை ஒப்புக்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார். அதைவிட, படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில் கவனம் செலுத்தி வருகிறார். டைரக்டர் சொன்ன நேரத்துக்கு முன்பே படப்பிடிப்பு தளத்துக்கு வந்து விடுகிறார்.

இப்போது அவர், `ஐரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சர்ஜன் டைரக்டு செய்கிறார். நயன்தாராவின் நேரம் தவறாமையை பார்த்து படக்குழுவினர் அனைவரும் மிரண்டு போகிறார்களாம். அவர்களிடம் நயன்தாரா மனம் விட்டு பேசியிருக்கிறார்.

``என்னை வைத்து படம் தயாரிக்கும் பட அதிபர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காகவே நான் நேரம் தவறாமையை கடை பிடிக்கிறேன். ஆனால், டைரக்டர் என்னை காத்திருக்க வைத்து விடுகிறார். ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் காட்சிகளை எடுப்பதில்லை'' என்று நயன்தாரா வருத்தப்பட்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து நயன்தாராவின் வருத்தத்தை போக்குகிற மாதிரி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முன் கூட்டியே படமாக்குவதில் டைரக்டர் கவனம் செலுத்துகிறாராம்!

Next Story