அடல்ட் காமெடி படங்களுக்கு வரவேற்பு

தமிழில் வெளிவந்த முதல் `அடல்ட் காமெடி' (வயது வந்தோருக்கான நகைச்சுவை) படம் என்ற சிறப்பை பெற்றது, `திரிஷா இல்லன்னா நயன்தாரா.' இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் நிறைய இடம் பெற்று இருந்தன. அதனால் பெண்கள் கூட்டம் வரவில்லை என்றாலும், இளைஞர்கள் கூட்டம் தியேட்டரில் நிரம்பி வழிந்தது. அதனால் அந்த படம் கணிசமாக வசூல் செய்தது.
இதைத்தொடர்ந்து அதே பாணியில், `இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற படம் தயாரானது. அந்த படமும் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக வசூல் செய்தது.
மேற்கண்ட 2 படங்களின் வசூல் நிலவரத்தை பார்த்து, விமல்-ஆஷ்னா சவேரி நடிப்பில் `இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' படம் அதே பாணியில் தயாரானது. எதிர்பார்த்ததைப் போல் இந்த படமும் அதிக வசூல் செய்தது. `அடல்ட் காமெடி' படங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து, அதே பாணியில் படம் தயாரித்து அதிக லாபம் பார்க்கலாம் என்ற தூண்டுதலை பட அதிபர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் விளைவாக புதுசாக ஒரு `அடல்ட் காமெடி' படம் தயாராகிறது. அதில் யாஷிகாவும், நிக்கி தம்பொலியும் நடிக்கிறார்கள். இருவரும் ஏற்கனவே `இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தில் நடித்து இருந்தார்கள்!
Related Tags :
Next Story