ஜி.என்.ஆர்.குமாரவேலன் டைரக்ஷனில், மைத்ரேயா

பிரபல சினிமா பைனான்சியர் ரகுநந்தன். 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர், பைனான்ஸ் செய்து இருக்கிறார். இவர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார்.
இவர், நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா ஆகிய படங்களை டைரக்டு செய்திருக்கிறார். இவர் இயக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக மைத்ரேயா நடிக்கிறார். இவர், பைனான்சியர் ரகுநந்தனின் மகன் ஆவார். கதாநாயகன் ஆனது பற்றி மைத்ரேயா சொல்கிறார்:-
``குமாரவேலன் சொன்ன கதை, பார்வையற்ற கதாநாயகனை பற்றியது. அந்த கதை எனக்கு பிடித்தது. என் தந்தையே அந்த படத்தை தயாரிப்பதாக முடிவானது. இதற்காக மிஷ்கினுக்கு ரூ.3 கோடி சம்பளம் பேசி, ஒரு கோடி முன்பணமாக கொடுத்தோம். மிஷ்கின் வாக்குறுதி கொடுத்தபடி நடந்து கொள்ளவில்லை. அதே கதையை உதயநிதி ஸ்டாலினை வைத்து, `சைக்கோ' என்ற பெயரில் படமாக்குகிறார். முன்பணமாக கொடுத்த ரூ.1 கோடியையும் தரவில்லை. இதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம்.
``என்னிடம் சொல்லி முன்பணம் வாங்கிய கதையை வேறு நடிகரை வைத்து படமாக்க கூடாது'' என்று கோர்ட்டு தடை விதித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்கும் அழுத்தமான கதையம்சம் கொண்ட படம், இது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.''
Related Tags :
Next Story