விட்டுக்கொடுத்த நிவின்பாலி


விட்டுக்கொடுத்த நிவின்பாலி
x
தினத்தந்தி 12 Jan 2019 11:12 AM GMT (Updated: 12 Jan 2019 11:12 AM GMT)

மலையாள உலகில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நிவின்பாலி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் முதல் படம் ‘மைக்கேல்’.

 அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை ஹனீப் அதேனி இயக்கியிருக்கிறார். இவர், மம்முட்டி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தி கிரேட் பாதர்’ படத்தை இயக்கியவர். இந்தப் படம் இம்மாதம் 26-ந் தேதி வெளியாவதாக முதலில் கூறப்பட்டது. 

ஆனால் அந்த நாளில் மோகன்லாலின் மகன் பிரணவ் நடித்துள்ள ‘இருபத்தியொன்னாம் நூற்றாண்டு’ படமும் வெளியாகிறது. எனவே இரண்டு படங்களும் மோதிக் கொள்ள வேண்டாம் என்பதற்காக, தன்னுடைய படத்தை முன்னதாகவே, அதாவது வருகிற 18-ந் தேதியே வெளியிட்டு விடும்படி சொல்லியிருக்கிறாராம் நிவின்பாலி. 

பிரணவ் நடிப்பில் வெளியான முதல் படம் ‘ஆதி’, கடந்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி வெளியாகி வெற்றிபெற்றது. அந்த சென்டிமெண்ட் இரண்டாவது படத்தையும் அதே நாளில் வெளியிட அவர்கள் முடிவு செய்ததால் நிவின்பாலி தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதாக சொல்லப்படுகிறது.

Next Story