சித்ரங்கதா சிங்கின் வாழ்க்கை ரகசியங்கள்..


நடிகை சித்ரங்கதா சிங்
x
நடிகை சித்ரங்கதா சிங்
தினத்தந்தி 20 Jan 2019 5:22 AM GMT (Updated: 20 Jan 2019 5:22 AM GMT)

இந்தி திரை உலகில் கவர்ச்சியும், திறமையும் ஒரே சேர அமையப்பெற்றவர், நடிகை சித்ரங்கதா சிங். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தனது கருத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தும் சுபாவமும் இவரிடம் உண்டு. அப்படி அவர் சொன்ன விஷயங்கள் இங்கே...!

உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்வது என்றால்...?

புதுமை பைத்தியம்.

மற்றவர்களுக்கு தெரியாத உங்கள் இரு ரகசியங்கள்?

உணவு மற்றும் ஊட்டச்சத்தில் நான் பட்டம் பெற்றிருக்கிறேன், பல்லியைக் கண்டாலே பயந்து அலறிவிடுவேன்.

உங்களைப் பொறுத்தவரை பெண்ணியம் என்பது?

பெண்ணியம் என்பது ஆண் எதிர்ப்போ, ஆண்களைத் திட்டித் தீர்ப்பதோ அல்ல. மாறாக, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை பெறுவது.

நீங்கள் நடிகையாகி இருக்காவிட்டால்..?

நான் ஊட்டச்சத்து நிபுணராக விரும்பினேன். ஆனால் அதற்கான தொடர் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் உணவு தொடர்பான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். உணவு மீதான எனது காதலுக்கு அது ஒரு வடிகாலாக அமைந்தது.

உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் திருப்பம்?

ஒரு டி.வி. விளம்பரத்துக்கு மாடலானது.

உங்கள் வாழ்வின் உயர்வான தருணம்?

கடந்த ஆண்டு ‘சூர்மா’ படத்தைத் தயாரித்ததும், அதற்காக நிறைய பாராட்டுப் பெற்றதும்.

உங்கள் வாழ்வின் தாழ்வான தருணம்?

நான் நடித்த சாகேப், பீவி ஆர் கேங்ஸ்டர் ஆகிய படங்கள் சரியாகப் போகாதது.

நீங்கள் முதன்முதலில் பார்த்த இந்தி திரைப்படம்?

ஷோலே (1975).

உங்களுக்குப் பிடித்த படங்கள்?

உம்ராவோ ஜான் (1981), தி பிரிட்ஜஸ் ஆப் மேடிசன் கவுன்டி (1995).

கொறித்துக்கொண்டே இருக்க விரும்பும் நொறுக்குத்தீனி?

பாப்கார்ன்.

பிடித்த சுற்றுலாத் தலங்கள்?

தாய்லாந்தும், இந்தோனேசியாவின் பாலியும்.

சிறுவயதில் நீங்கள் அதிகம் திட்டு வாங்கிய விஷயம்?

நான் சிறுவயதில் அடிக்கடி லிப்ஸ்டிக் போட்டு உடனுக்குடன் துடைத்துவிடுவேன். அதற்காக எங்கம்மாவிடம் நன்றாகத் திட்டும் வாங்குவேன்.

நீங்கள் சாப்பிட்ட வித்தியாசமான உணவு?

ஒரு காளையின் நாக்கு! அதை ஒரே ஒருமுறைதான் ருசித்திருக்கிறேன்.

Next Story