சினிமா துளிகள்

அடுத்த வருடம் டும்...டும்...! + "||" + Next year will be Dum Dum ...!

அடுத்த வருடம் டும்...டும்...!

அடுத்த வருடம் டும்...டும்...!
மெட்ராஸ், பரதேசி, ஒரு நாள் கூத்து, கபாலி, அஞ்சல, சிகை உள்பட பல படங்களில் நடித்துள்ள ரித்விகாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை ஒரு பட விழாவில், அவரே தெரிவித்தார்.
‘‘நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியிருக்கிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. என் திருமணம், அடுத்த வருடம் (2020-ல்) நடைபெறும்.

அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களில் நடித்து முடித்து விடுவேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்துக்குப்பின் நடிப்பதா, வேண்டாமா? என்பதை என் கணவர் முடிவு செய்வார்’’ என்கிறார், ரித்விகா!