சர்ச்சைக்குரிய படம்


சர்ச்சைக்குரிய படம்
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 2:06 PM GMT)

ஆந்திராவின் முன்னாள் முதல்- அமைச்சரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டது.

இரண்டு பாகமாக உருவாகும் அந்த படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியானது. அடுத்த பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் என்.டி.ஆராக, அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்திருந்தார். இந்த நிலையில் என்.டி.ஆரின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதியை மையமாக வைத்து ஒரு படம் தயாராகி வருகிறது. அந்தப் படத்திற்கு ‘லட்சுமியின் என்.டி.ஆர்.’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கு சினிமா உலகின் சர்ச்சை இயக்குனரான ராம்கோபால் வர்மா இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியாகும் நேரத்தில் என்.டி.ஆரின் ரசிகர்களிடம் இருந்தும், என்.டி.ஆர். குடும்பத்தினரிடம் இருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பும் என்று, இப்போதே தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story