சினிமா துளிகள்

அனுபமாவுக்கு வரவேற்பு + "||" + Anupama welcome

அனுபமாவுக்கு வரவேற்பு

அனுபமாவுக்கு வரவேற்பு
‘நடசார்வபோவ்மா’ படத்தில் அனுபமா ஏற்று நடித்திருக்கும் வேடத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கன்னடத்தில் கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் ‘நடசார்வபோவ்மா.’ கன்னடத்தின் முக்கிய நடிகராக வலம் வரும் புனீத் ராஜ்குமார் இதில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர், ரஷிதா ராம். இந்த படத்தில் இன்னொரு மு   க்கியமான கதாபாத்திரத்தில் ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். பவன் வடேயர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் படம் வெற்றிப்படமாக மாறியிருக்கிறது. இதில் அனுபமா ஏற்று நடித்திருக்கும் வக்கீல் வேடத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளைத் தொடர்ந்து கன்னடத்திலும் அவர் தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.