சினிமா துளிகள்

வில்லன் இயக்கத்தில் பிருத்விராஜ் + "||" + Villain In Direction Prithviraj

வில்லன் இயக்கத்தில் பிருத்விராஜ்

வில்லன் இயக்கத்தில் பிருத்விராஜ்
‘த்ரிஷ்யம்’ படத்தில் வில்லனாக நடித்த கலாபவன் சாஜன் இயக்கத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார்.
பிருத்விராஜ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘விமானம்’ படத்தை தயாரித்தவர் லிஸ்டின் ஸ்டீபன். எதிர்பார்ப்போடு வெளியான இந்தப் படம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பான பிருத்விராஜ் புரொடக்‌ஷன் சார்பில் எடுக்கப்படும் ‘பிரதர்ஸ் டே’ என்ற படத்தில் லிஸ்டின் ஸ்டீபனையும் பங்குதாரராக இணைத்திருக்கிறார் பிருத்விராஜ். ‘விமானம்’ படத்தில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பிருத்விராஜ் இப்படி செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் ‘பிரதர்ஸ் டே’ படத்தை கலாபவன் சாஜன் இயக்குகிறார். இவர் மலையாளத்தில் அதிரிபுதிரி வெற்றியைப் பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தில் வில்லனாக நடித்தவர். இந்தப் படம் ரூ.15 கோடி செலவில் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.