பட்ஜெட்

`பட்ஜெட்'டில் கவனம் செலுத்தும் விஜய்! + "||" + Vijay to focus on `Budget'

`பட்ஜெட்'டில் கவனம் செலுத்தும் விஜய்!

`பட்ஜெட்'டில் கவனம் செலுத்தும் விஜய்!
தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட அதிபர்களும், தன் படங்களை வாங்கி திரையிடும் வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களும் எந்த வகையிலும் நஷ்டம் அடையக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார், விஜய்.
அவரும், டைரக்டர் அட்லீயும் `தெறி,' `மெர்சல்' ஆகிய 2 படங்களில் சேர்ந்து பணிபுரிந்தார்கள். 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணிபுரி கிறார்கள்.

படத்துக்கு ஆகும் செலவு பற்றி அட்லீ கவலைப்படுவதில்லை. கடந்த 2 படங்களிலும் அவர் அதிக செலவை இழுத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதனால் விஜய் உஷாராகி விட்டார். படத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகி விடக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார்!