எதிர்பார்ப்பை உருவாக்கிய செல்வராகவன்!
தமிழ் திரையுலகின் திறமையான டைரக்டர்களில் ஒருவர், செல்வராகவன். இவர் டைரக்டு செய்த ‘காதல் கொண்டேன்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்,’ ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்கள் செல்வராகவனின் திறமைக்கு உதாரணங்கள்.
செல்வராகவன் டைரக்ஷனில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த படத்துக்கு சினிமா வட்டாரத்திலும், வெளியிலும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘என்.ஜி.கே.’ படம் பூர்த்தி செய்யும் என்று செல்வராகவன் கூறியிருக்கிறார்.
அவரிடம், ‘வெப் சீரிஸ்’ படங்களை இயக்கும் எண்ணம் இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன், ‘‘வெப் சீரிஸ் படங்களை இயக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால், இதுவரை வெப் சீரிஸ் படம் இயக்குவதற்காக யாரும் என்னை அணுகவில்லை’’ என்றார்.
Related Tags :
Next Story