தெலுங்கிலும் பெண்கள் நல அமைப்பு


தெலுங்கிலும் பெண்கள் நல அமைப்பு
x
தினத்தந்தி 1 Jun 2019 4:11 PM IST (Updated: 1 Jun 2019 4:11 PM IST)
t-max-icont-min-icon

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ‘மீ டூ’ என்ற விவகாரம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்பட பிரபலங்களையும் கலங்கடித்து வருகிறது.

திரையுலகில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்காக, மலையாளத்தில் திரையுலக பெண்கள் நல அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் பார்வதி, ரீமாகல்லிங்கல், ரேவதி, பத்மப்பிரியா உள்ளிட்ட பல நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழிலும் கூட ரோகிணி தலைமையில் இதுபோன்ற அமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு திரையுலக பெண்களின் பாதுகாப்புக்காக ஒரு அமைப்பை, நடிகை லட்சுமி மஞ்சு உருவாக்கியிருக்கிறார். இவர் தெலுங்கின் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான மோகன்பாபுவின் மகள் ஆவார். இந்த அமைப்பில் இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 More update

Next Story