சினிமா துளிகள்

சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி படங்கள் மோதல்! + "||" + Sivakarthigeyan-vijaycetupati pictures collision!

சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி படங்கள் மோதல்!

சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதி படங்கள் மோதல்!
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த `மிஸ்டர் லோக்கல்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வசூலும் குறைந்தது. இதனால், அவருடைய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து அடுத்தடுத்து 2 படங்கள் திரைக்கு வர இருப்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ஆயுதபூஜை அன்று திரைக்கு வர யிருக்கிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `ஹீரோ’ படம் வெளிவர இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் சிவகார்த்திகேயன் நடித்து 3 படங்கள் வெளியாவதால், அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆயுதபூஜைக்கு வெளிவரும் சிவகார்த்திகேயன் படத்துடன், விஜய்சேதுபதி நடித்து வரும் `சங்க தமிழன்’ படம் மோத இருக்கிறது. அதில் வெற்றி பெறப்போகிறவர் யார்? என்ற எதிர்பார்ப்பு திரையுலகம் முழுவதும் பரவியிருக்கிறது.