சினிமா துளிகள்

கதாநாயகனாக சாவித்ரியின் பேரன்! + "||" + Savithri's grandson as hero!

கதாநாயகனாக சாவித்ரியின் பேரன்!

கதாநாயகனாக சாவித்ரியின் பேரன்!
மறைந்த நடிகை சாவித்ரியின் பேரன் (மகள் விஜயசாமுண்டீஸ்வரியின் மகன்) அபினய் வடி, `ராமானுஜம்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
`மைக்கேல் ஆகிய நான்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. அடுத்து அவர் நடிக்கும் படம், `சுகர்.' இந்த படத்தில் சிம்ரன், திரிஷா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார்.

``இது, காணாமல் போன ஒரு முதலையை பற்றிய கதை. பெரும்பகுதி காட்சிகள் சென்னையை அடுத்த பிச்சாவரத்தில் படமாக்கப்பட்டன. அடுத்து ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கிறேன். அத்தியப்பன் சிவா டைரக்டு செய்கிறார். தொடர்ந்து காதல் நாயகனாக நடிக்க விரும்புகிறேன்'' என்கிறார், அபினய் வடி.