சினிமா துளிகள்

சமந்தா படத்துக்கு எதிர்பார்ப்பு! + "||" + Anticipation for the Samantha film!

சமந்தா படத்துக்கு எதிர்பார்ப்பு!

சமந்தா படத்துக்கு எதிர்பார்ப்பு!
விஜய் சேதுபதி-திரிஷா நடித்து, கடந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், `96.' இந்த படம் கன்னடத்தில் `ரீமேக்' செய்யப்பட்டு வெற்றி பெற்றது.
 தெலுங்கில், `ரீமேக்' ஆகிறது. இதில், திரிஷா நடித்த கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது.

`96' படத்தில் திரிஷா எந்த நிறத்தில் உடை அணிந்திருந்தாரோ, அதே நிறத்தில் சமந்தாவும் உடை அணிந்து நடித்து வருகிறார். தமிழ் படத்தைப் போல், தெலுங்கு படத்துக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.