கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?


கீர்த்தி சுரேஷ் கைவசம் படங்கள் இல்லாதது ஏன்?
x
தினத்தந்தி 18 Aug 2019 12:00 AM GMT (Updated: 17 Aug 2019 7:14 PM GMT)

கீர்த்தி சுரேஷ் இப்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் நடிப்பில் வந்த `மகாநடி' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

`மகாநடி' படம் தமிழில், `நடிகையர் திலகம்' என்ற பெயரில் வெளிவந்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படம், தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அதன் விளைவுதானோ, என்னவோ கீர்த்தி சுரேஷ் கைவசம் புதிய தமிழ் படங்கள் அதிகமாக இல்லை. விஜய்யுடன் நடித்த `சர்க்கார்' படத்துக்குப்பின், இவருக்கு புதிய படங்கள் எதுவும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஒரு சிறிய இடைவெளிக்குப்பின், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த படத்தை ஈஸ்வர் கார்த்திக் டைரக்டு செய்கிறார். சந்தோஷ் நாராயண் இசையமைக்கிறார்.

Next Story