சினிமா துளிகள்

ஜான்வி கபூர் குறிவைக்கும் படம் + "||" + Jhanvi Kapoor Targets Movie

ஜான்வி கபூர் குறிவைக்கும் படம்

ஜான்வி கபூர் குறிவைக்கும் படம்
விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
டோலிவுட் என்று சொல்லப்படும் தெலுங்கு சினிமா திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது படங்களின் தொடர் வெற்றி, இவரை உயர்ந்த இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. இவர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம், பாலிவுட்டில் தயாராகி, பல படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ‘டியர் காம்ரேட்’ திரைப்படமும் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரிஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்து வருவதாகவும் தெலுங்கு சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இயக்குனர் பூரி ஜெகன்னாத், சார்மியை ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.