அக்‌ஷய்குமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!


அக்‌ஷய்குமார் ஜோடியாக கீர்த்தி சுரேஷ்!
x
தினத்தந்தி 24 Aug 2019 10:00 PM GMT (Updated: 24 Aug 2019 11:36 AM GMT)

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து பிரபல கதாநாயகர்கள் ஜோடியாக சில படங்களில் நடித்து பிரபலமானார்.

ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க  ஆரம்பித்தார். அவர் நடித்த ‘மகாநடி’ (நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு) என்ற தெலுங்கு படம், மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

அதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதோடு ஒரு இந்தி பட வாய்ப்பும் அவருக்கு வந்தது. ‘மைதான்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படம், இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை வரலாறை கருவாக கொண்ட படம் ஆகும்.

இதில், அக்‌ஷய்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

Next Story